புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டனில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஊடகம் மற்றும் பத்திரிக்கைத்துறையினர், துப்பரவு பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பூங்கொத்து கொடுத்தும், பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்களை வழங்கியும் வாழ்த்து பெற்றனர். பின்னர், அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்துடன் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

Night
Day