எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களுக்கும், ஒரு சில செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால், அந்த நாய்கள் கடிக்கும் மக்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு நாய்கள் தொந்தரவு அதிகரிப்பை மாநகராட்சி, நகராட்சியினர் கட்டுப்படுத்தாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரத்தில் வீதிகளில் நடக்கவே அச்சமாக இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்ததாகவும், 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.