போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் - இந்தியா, சீனா, பாகிஸ்தான் - டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பட்டியலிட்டுள்ளார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அதிபர் தீர்மானத்தில், 23 நாடுகளை பெரிய போதைப்பொருள் கடத்தல் அல்லது சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளாக அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம், இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 

Night
Day