எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்-கை சுட்டுக் கொன்றவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உட்டா பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட வேறு யாரும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும், அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்ததாக கூறியுள்ளார். படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையை சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார் ஒரு கட்டிடத்தின் கூரையிலிருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறினர்.