மனைவி, அவரது காதலன் தலையை துண்டித்து கொலை செய்த கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக்கோட்டாலம் அருகே மனைவி மற்றும் அவரின் காதலனின் தலையை வெட்டி எடுத்து வேலூர் மத்திய சிறைக்கு சென்று கணவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதனை லட்சுமியின் கணவர் கொளஞ்சிக்கு தெரிய வரவே அவர் பலமுறை எச்சரித்துள்ளார். இதனை சற்றும் கண்டுகொள்ளாத லட்சுமி, திருமணம் கடந்த உறவை தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த லட்சுமியின் கணவன் கொளஞ்சி, இன்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த இருவரையும் கொலை செய்துவிட்டு, இருவரின் தலையையும் வெட்டி எடுத்து வேலூர் மத்திய சிறைக்கு சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவி மற்றும் காதலனை கொலை செய்து தலையை வெட்டிய சம்பவம் மலைக்கோட்டாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day