எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி, திருவண்ணாமலை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கழக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒன்றுபட்ட வலிமைமிக்க அஇஅதிமுகதான் 2026 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை தோற்கடிக்க வழிவகை செய்யும் என்றும், கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்றும் மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், திருவண்ணாமலை மாநகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், அறிவொளி பூங்கா, மாநகர மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் தாழ்வு', அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வாசகங்களுடன் கழக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.