'ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்' என்ற புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்றுபடுவோம், வென்றுகாட்டுவோம் என்ற புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். உசிலம்பட்டி நகர பகுதி மற்றும் கிராம பகுதி முழுவதும் 'ஒன்றிணைவோம், 2026-ல் மீட்டெடுப்போம் அம்மாவின் ஆட்சியை' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

Night
Day