வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் மோதலில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அணு ஆயுத நாடுகளாக அவை போரை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர  மோடியைத் அழைத்து பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவதால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்று கூறியதாகவும், இதேபோல் பாகிஸ்தான் பிரதமரிடமும் கூறியதாகவும் தெரிவித்தார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலைக் கைவிட முதலில் மறுத்ததாக தெரிவித்தார். பின்னர் இரு நாட்களுக்குப் பின்னர் தன்னை அழைத்து போரை நிறுத்திவிட்டதாக தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியாவின் பிரதமர் மோடி மீது தனக்கு மரியாதையும் அன்பும் இருப்பதாகவும் அவர் பார்ப்பதற்கு அழகாக தெரிபவர் என்றும் கூறினார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

Night
Day