10 மாதத்தில் 19 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 19 வயதுக்கு உட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு நலன் குறித்த கூட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு நலன் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் வேலூர் காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 9 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 19 வயதுக்கு உட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாக  அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மேலும் நடப்பாண்டில் இதுவரை 201 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 56 குழந்தை திருமணம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  குழந்தை திருமணம் மற்றும் சிறுமிகள் பிரசவம் ஆவதை  தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Night
Day