அரசு பணி நியமனத்தில் ஊழல்-போலீசுக்கு, அமலாக்கத்துறை கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில், 2 ஆயிரத்து 538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனம் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பதவிக்கும் 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் குறைந்தது 150 தேர்வர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரத்து 538 பணியிடங்களிலும் முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போதும், அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day