சாலையில் கிடந்த பணம் ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் சாலையில் இருந்து கிடைத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கடந்த 27 ஆம் தேதி சிம்மக்கல் பகுதியில் சாலையில் சாக்குமூட்டையில் கிடந்த 17 லட்சம் ரூபாய் இருந்த பணமூட்டையை பெண் ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த பணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கேரள மாநிலம் ஆரியமாலா பகுதியை சேர்ந்த வாகன உதிரிபாக விற்பனையாளர் மகேஷ், மணிகண்டன் ஆகியோர் பணம் தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிமை கோரும் நபர்களிடம் பேட்டரி ஆவணங்களை கேட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day