எழுத்தின் அளவு: அ+ அ- அ
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118 வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்று, '2026ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், அஇஅதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்' என்ற வாசகங்களுடன் கழக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு நாளை காலை 11 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு மதுரைக்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்கும் விதமாக மதுரையில் உள்ள விரகனூர், சிந்தாமணி, ஏர்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 2026இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அஇஅதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், 2026இல் தமிழகத்தில் கழக ஆட்சி அமைக்க புரட்சித்தாய் சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும், திக்கின்றி தவிக்கும் அஇஅதிமுக தொண்டர்களின் "ஒளிவிளக்கே", "வாழும் வேலு நாச்சியாரே வருக வருக உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.