ஒரு பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை லஞ்சம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு விளம்பர திமுக அரசு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பி இருப்பதை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி உள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருப்பதாகவும், அமலாக்கத் துறை இப்போது திமுக அரசின் மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்களை மேற்கொண்டுள்ள திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். 

Night
Day