கணவனை அடித்து மனைவியின் தாலி செயினை திருடிவிட்டு தப்பியோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துநகர் பகுதியை சர்ந்த பாலமுருகன் என்பவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து புகுந்த மர்மநபர்கள் அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதனால் பாலமுருகன் நிலைகுலைந்த நிலையில் அவரது மனைவியின் கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த பாலமுருகன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day