சொத்துக்காக தாயை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த கொடூர மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி அருகே சொத்துக்காக தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கசிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆதிமூலம் - வெங்கடேஷ்வரி தம்பதியரின் மகன் வெற்றிச்செல்வன். இவர், சென்னையில் ஆடிட்டரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஆதிமூலத்திற்கு சொந்தமான வீட்டை விற்று விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு மகன் வெற்றிச்செல்வன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மகனுக்கும் தந்தைக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டதால், தந்தையை கத்திரிக்கோலால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதையடுத்து திருப்பத்தூர் நகர் பாவுசா நகரில் உள்ள வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தனது அம்மாவை காண வந்த வெற்றிச்செல்வன் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். இங்கிருந்தால் பிரச்சனை ஏற்படும் என நினைத்த ஆதிமூலம், கசிநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டும், இரும்பு ராடால் தலையில் தாக்கியும் தாயை கொலை செய்துவிட்டு வெற்றிச்செல்வன் தப்பியோடியுள்ளார். மறுநாள் வீட்டை திறந்து பார்த்த போது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆதிமூலம், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாயை கொன்ற வெற்றிச் செல்வனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Night
Day