கவின் ஆணவப்படுகொலை.. சிபிசிஐடி விசாரணையில் சுர்ஜித் தரப்பு அதிருப்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என கொலையாளி சுர்ஜித் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் கவின் என்பவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக சுர்ஜித்தும், அவரது தந்தையும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சரவணனுக்கு ஜாமின் கேட்டு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ஜாமின் வழங்குவது தொடர்பான உத்தரவு இன்று மாலையில் பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுர்ஜித் தரப்பு வழக்கறிஞர் சிவ சூரிய நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும், பொய்யான ஆதாரங்களை சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கவின் கொலையில் உதவி ஆய்வாளர் சரவணன் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கான எந்த முகாந்திரமும் சிபிசிஐடி தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Night
Day