மாதம் ரூ.15,000 ஊதியம் பெறும் ஊழியருக்கு ரூ.72 கோடி மதிப்பில் சொத்துக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் அரசு அலுவலக ஒப்பந்த ஊழியர் 72 கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி துறையில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்  கலகப்பா நிடகுந்தி சட்ட விரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இப்புகார்களின் பேரில் அவரது வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்  350 கிராம் தங்க நகைகள்,  அவரது மனைவி பெயர்களில் 24 வீடுகளும், 40 ஏக்கருக்கு விவசாய நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலகப்பா மீது கொப்பல் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day