எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளியின் துயர நிலையறிந்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் 3 சக்கரம் வாகனம் வழங்கப்பட்டது. இதற்காக புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, பெண் மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்காள் என்ற 60 வயது மாற்றுத்திறனாளி, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் 3 சக்கர வாகனம் கேட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதுவரை அவருக்கு அந்த வாகனம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை இருந்தும் அங்குள்ள பணியாளர்கள் தன்னை பணிக்கு அழைப்பதில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி மூதாட்டியான மாயக்காள் வருகை தந்தார்.
எந்தவித வாகன வசதியும் இல்லாத நிலையில் கடும் வெயிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சாலையில் தவழ்ந்தபடி ஆட்சியரகத்திற்கு மாயக்காள் வருகை தந்தது காண்போரை கலங்க செய்தது.
மாற்றுத்திறனாளி மூதாட்டி மாயக்காளின் நிலைமையை அறிந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மாயாக்காளின் கோரிக்கையான மூன்று சக்கர வாகனத்தை வழங்க ஆவண செய்தார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் கிராமத்தில் உள்ள மாயக்காள் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற கழக நிர்வாகிகள், புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் மூன்று சக்கர வாகனத்தை வழங்கினர்.
3 சக்கர வாகனத்தைப் பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளி மூதாட்டி மாயக்காள் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு மனமுருக நன்றி தெரிவித்தார். விளம்பர திமுக அரசு நான்கு ஆண்டுகளாக கண்டு கொள்ளாத நிலையில், புரட்சித்தாய் சின்னம்மா, தனக்கு மூன்று சக்கரம் வாகனம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் உதவி வழங்கப்பட்டதை பார்த்து அப்பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.