பிரதமர் மோடிக்கு இன்று 75வது பிறந்தநாள் - பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் அசாதாரண தலைமைத்துவத்தால் நாட்டில் சிறந்த இலக்குகளை அடையும் கலாச்சாரத்தை அவர் விதைத்துள்ளதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், தனித்துவமான தலைமையுடன், நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் கடவுளிடம் பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெவிப்பதாகவும், உங்கள் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா உலக அரங்கில் ஒரு முத்திரையைப் பதித்து, வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி சீராக நகர்ந்துகொண்டிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என சி.பி.ஆர் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துவதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவதாகவும் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார். 

நடிகர் ரஜினியின் வாழ்த்து செய்தியில், மதிப்பிற்குரிய என் அன்பான பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறினார். பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துவதாக நடிகர் ரஜினி பதிவிட்டுள்ளார். 

இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இன்று தொடங்கும் 15 நாள் திட்டமான சேவா பக்வாடா பிரச்சாரத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ரத்த தானம் செய்துள்ளார். 

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளுக்கு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடிகர் விவேக் ஓப்ராய் ரத்த தானம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஓப்ராய், இளம் தலைமுறையினரின் முன்னுதாரணம் தான் பிரதமர் மோடி என்றும், பிரதமர் மோடிக்காக உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 500 மையங்களில் 75 ஆயிரம் நபர்கள் ரத்த தானம் செய்வதாகவும் கூறினார்.

இதனிடையே பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு மா வந்தே என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு தாயின் துணிவு, பல போர்களை வெல்லும் என்ற வசனத்துடன் வெளியாகி உள்ள அறிமுக போஸ்டருக்கு வரவேற்பு பெற்றுள்ளது.




Night
Day