டாக்சி ஓட்டுநர் அலட்சியத்தால் நேர்ந்த விபத்து....

எழுத்தின் அளவு: அ+ அ-


கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலையை கடந்த கார் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாதுர்யமாக இயக்கி பெரும் விபத்தை தடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை, பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

கோவையிலிருந்து சக்தியை நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் அருண் என்பவர் இயக்கியுள்ளார். நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் ஒன்று சாலையை கடக்க முயன்றதால், அதன் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை திருப்பி மரத்தில் மோதி நிறுத்தியதால் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது. சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பேருந்தின் அடியில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருந்து பயணிகள், கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day