நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கழக மூத்த முன்னோடி மறைந்த இரா.நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக மூத்த முன்னோடி மறைந்த இரா.நெடுஞ்செழியன் மற்றும் கழக முன்னாள் அமைப்பு செயலாளரும், முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான மறைந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் மகனான மதிவாணன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்ற நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் கழக குடும்பத்தில் இருந்து ஒருவரை இழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திரு. மதிவாணனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day