ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து பாதுகாப்புபடையினருக்கு தகவல் கிடைத்தது. அதின் பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு, பாதுகாப்புப்படையினருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பலமணி நேரம் நீடித்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

varient
Night
Day