எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியில் நடைபெற்ற விளம்பர திமுக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி மேடையிலேயே திமுக எம்பி தங்க தமிழ்செல்வனும், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில்  நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது. முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோவத்துடன்  மேடைக்கு வந்த  எம்பி தங்க தமிழ்செல்வன், பேனரில் தனது படம் இல்லாதது குறித்து அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். மேலும், மேடையிலேயே எம்எல்ஏ மகாராஜனை தரகுறைவாக பேசியுள்ளார். கோபத்தில் அமர்ந்திருந்த மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது தங்க தமிழ் செல்வன் வழங்கவிடாமல் தடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திமுக உட்கட்சி பூசல் கொஞ்சம் கொஞ்சம் வீதிக்கு வருவதாக அங்கிருந்த பொதுமக்கள் புலம்பினர். தொகுதி திமுக எம்பியும், எம்எல்ஏவும் மேடையிலேயே வாக்குவாததில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 

Night
Day