இந்தியா இறந்த பொருளாதாரம் என டிரம்ப் விமர்சனம் - மோடி பதிலடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பஹல்கலாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறினார்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் 20வது முறையாக 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி உதவியை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய, பிரதமர் மோடி ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக காசி மண்ணை மிதித்திருப்பதாக கூறினார். மேலும்,  பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவத்தால் தனது இதயம் துக்கத்தால் நிறைந்து இருந்ததாகவும் கூறினார். இதனால் தனது மகள்களின் சிந்தூருக்குப் பழிவாங்குவதாக சபதம் எடுத்து, அதை மகாதேவின் ஆசியுடன் நிறைவேற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். 

Night
Day