மதுபோதையில் தகராறு - கூலி தொழிலாளி வெட்டி கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மூக்கன். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் தங்க கணபதி என்பவரும் மதுக்கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த மூக்கன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்ககணபதியை தாக்கினர். இதனையறிந்த அவரது தம்பி முத்துகுமரன், மூக்கனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் முத்துகுமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day