ஆழிப்பேரலையில் சிக்கி தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய துணைக் கண்டத்தின் இறுதிமுனையான தனுஷ்கோடி ஆழிப்பேரலையில் சிக்கி  இருந்த இடம் தெரியாமல் போய் இன்றுடன் 61-வது ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
 
கடந்த 1964ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் வங்கக்கடலில் உருவான புயல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை தடம் தெரியாமல் அழித்தது. இதில், சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயில் கூட கடல் அலைகளின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கடலில் கவிழ்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆழிப்பேரலையில் சிக்கி தனுஷ்கோடி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் இன்றுடன் 61-வது ஆண்டை எட்டியுள்ளது.

Night
Day