சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விளம்பர திமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, விளம்பர திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாடு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் 5-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்களத்தில் ஈடுபட்ட செவிலியர்களை அழைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.‌ சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு எந்த  வாக்குறுதியும் அளிக்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களுடன் ஆலோசித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் நான்காவது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்ட முழக்கமிட்டனர்.

கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 4-வது நாளாக செவிலியர்கள் பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Night
Day