கோயிலில் திருட முயன்றவரை கைது செய்த போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காளியம்மன் கோயிலில் திருட முயன்ற நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். 

ரெங்கராம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் இரவில் நுழைந்த மர்ம நபர் கோயில் பூட்டு மற்றும் கதவை உடைக்க முடியாததால் சுவரை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்து திருடன் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட இளங்கோவன் என்பவரை கைது செய்தனர். மேலும் கோயில் வளாகத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், போலீசார் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day