சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு காவல்துறையே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளது. 

பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காவல்துறையினர் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். மேலும் புகார் அளித்த மறுநாள் அதிகாலையிலேயே, கதவை உடைத்து அவசர அவசரமாக சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, காவல்துறையால்தான் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.

Night
Day