நீலகிரியில் கிணறு வெட்டும் பணியின் போது இருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 நீலகிரி மாவட்டம் ஒன்னட்டி அருகே கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்த விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஒன்னட்டி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில், அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், சதீஷ்குமார் உள்பட 8 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று வழக்கமான பணியின் போது, கிணற்றில் சுற்றுவட்ட மண் திட்டு சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட பன்னீர்செல்வம், சதீஷ்குமார் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

Night
Day