டாஸ்மாக் ஊழியரை தாக்கிய தந்தை, மகன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூரில் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கேட்டதால் ஆந்திரமடைந்த மதுப்பிரியர்கள் ஊழியரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் சில்வஸ்டர் என்பவர் மதுப்பிரியர்களிடம் 10 ரூபாய் அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கியுள்ளனர். 

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்ட நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் அதிகமாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, குன்னூரில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய தந்தையையும் மகனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day