ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து மயிலாடுதுறை அருகே கவிழ்ந்து விபத்துகுள்ளானத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு  சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே பேருந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Night
Day