சபரிமலை சீசன் : சென்னை - கொச்சி விமான கட்டணம் 3 மடங்காக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை சீசனையொட்டி விமானங்களின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


விமானங்களில் இருமுடி கட்டி எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சிறப்பு சலுகை, வருகிற ஜனவரி 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை - கொச்சி இடையே 3 ஆயிரத்து 681 ரூபாய் விமான கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 11 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் சென்னை - கொச்சி இடையே 14 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 7 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day