பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து கொலை வெறிதாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மணிமங்கலத்தில், பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாஜக அமைப்பாளரான செல்வமணி, பொதுக்கூட்டத்தில் ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீடுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், செல்வமணியை தாக்க முயன்றனர். அப்போது, அவர் தப்பி ஓடியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் ஜன்னல்கள், அங்கிருந்த சொகுசு கார் மற்றும் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day