குடும்ப பிரச்னையில் மனைவி அடித்துக்கொலை - கணவன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அசோக் நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

புதூர் தெருவை சேர்ந்தவர் வித்யபாரதி. இவருக்கு பிரவீன்குமார் என்ற கணவனும் 2 குழந்தைகளும் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான பிரவீன்குமார் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்த பிரவீன்குமார் தனது மனைவி வித்யபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் தப்பியோடிய கணவர் பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day