கைதான ஆசிரியர்களை மண்டபத்தில் அடைக்காமல் பேருந்தை நிறுத்தி வைத்து அலைக்கழிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார் 4 மணி நேரமாக பேருந்திற்குள் அடைத்து வைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான ஆசிரியர்களை அடைத்து வைத்துள்ளதால் மூச்சு திணறல் ஏற்பட்டும், இயற்கை உபாதைகளுக்கு மறுப்பு தெரிவித்ததால் சில ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். கைதானவர்களை மண்டபத்தில் அடைக்காமல் பேருந்தை நடுவழியில் நிறுத்தி வைத்து உணவு, தண்ணீர்க்கூட வழங்காமல் போலீசார் அடக்குமுறையில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day