கோவை: வடவள்ளி கரி வரதராஜ பெருமாள் கோயில் நகைகள் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வடவள்ளியில் அமைந்துள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி அறநிலையத்துறை துணை தலைமையில் நடைபெற்றது. அப்போது, இத்திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலின் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் தாயாருக்‍கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடையுள்ள தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூலை கொண்டு வந்து கொடுத்தார். அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை போலியானது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து அர்ச்சகரிடம் விசாரணை நடத்தியதில், நகைகள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கோயில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.

Night
Day