கல்லூரி மாணவன் தற்கொலை: விடுதி காப்பாளரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை செய்த சம்வம் தொடர்பாக விடுதி காப்பாளரை கைது செய்த வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரியலூரை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் திருச்சி தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அபிஷேக்கின் தந்தை வெங்கடேசனை, கல்லூரிக்கு வரவேண்டும் என விடுதியில் இருந்து அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து வெங்கடேசன் விடுதிக்கு சென்ற நிலையில் வெகுநேரமாகியும் மகன் வரததால் சந்தேகமடைந்த அவர், விடுதி காப்பாளரிடம் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து, அபிஷேக் குளியலறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து மாணவனின் தற்கொலைக்கு காரணமான விடுதி காப்பாளரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி உறவினர்கள் மற்றும் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

Night
Day