குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடையராஜாபாளையத்தை சேர்ந்த தம்பதியர்  சத்யராஜ்-சுமதி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சத்யராஜ், சுமதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமதி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day