வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராஜகிரி வடக்கு தெருவை சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, மற்றொரு தெருவில் உள்ள தன்னுடைய புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 16 சவரன் நகையை திருடிவிட்டு, வீட்டின் மாடிப்படி முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த ஹாஜா மைதீனின் மகனை மர்மநபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day