காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிபாதமாக உயிரிழந்தார். நெடிய மாணிக்கத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார். இவர் சத்திரக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தெய்வேந்திர நல்லூர் அருகே
மதுரை நோக்கி வந்த காரும், பைக்கும் மோதிக் கொண்டதில் மதன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Night
Day