பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - 13 பேருக்கு சம்மன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ரயில்வே துறை சார்பில் 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே மூடப்படமால் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 3 மாணாக்கர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மா, வேன் ஓட்டுனர் சங்கர் உட்பட 13 பேர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளார்.

இதேபோன்று மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இயக்கிய லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் மீனா ஆகியோருக்கும் சம்மன் விடுக்கப்பட்டுள்ளது. ரயில் வரும்போது சம்பந்தப்பட்ட லெவல் கிராஸ்ங்கில் ஒலி எழுப்பவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தை தொடர்ந்து, புதிய கேட் கீப்பர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் கேட் கீப்பர் பங்கஜ சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் தெரியாதவரை நியமித்தது சர்ச்சையான நிலையில், தற்போது புதிய கேட் கீப்பராக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஆனந்த ராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார். கேட் திறப்பது, ரயில் வருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆனந்தராஜிடம் தெரிவித்துள்ளனர். 

Night
Day