போக்கு காட்டிய முதலை பிடிபட்டது

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த முதலை பிடிப்பட்டநிலையில், பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்டது.

சிறுமுகை ஏழெருமை பள்ளம் என்ற இடத்தில் மழைநீர் தடுப்பணையில் முதலை  பதுங்கி இருப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினருக்கு கடந்த 2 நாட்களாக முதலை போக்கு காட்டி வந்தது. இதனையடுத்து பாறையின் இடுக்கில் இருந்த முதலையை பார்த்த வனத்துறையினர், மோட்டார் பம்ப் மூலம் நீரை அகற்றி முதலை பிடித்தனர். பிடிப்பட்ட முதலை பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்பட்டது. 

Night
Day