எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 42 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
திருப்பூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதியில் சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் 20க்கும் மேற்பட்ட தகர செட் வீடுகள் உள்ளன. இந்த லைன் வீடுகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் இருந்த 9 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. சிலிண்டர்கள் வெடித்த போது வீடுகளில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் போதுமான வழித்தடம் இல்லாததால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறினர். இந்த விபத்தில் 42 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. உடைமைகள் அனைத்தும் எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.