பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண் காவலர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலனூர் காவல் நிலையத்தில் லட்சுமி என்கிற பெண் காவலர் பணியாற்றி வருகிறார், டிஎஸ்பி சுரேஷ்குமார், காவலர் லட்சுமியை அதிக பணி சுமையை ஏற்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தததில் இருந்த லட்சுமி சம்பவத்தன்று, காவல்நிலைய நுழைவாயில்  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். காவலர் லட்சுமியை சக காவலர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day