சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக்கை அரிவாளால் வெட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோலை அழகுபுரம் பகுதியில் அதிகளவிற்கு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதே பகுதியை சேர்ந்த முதியவர் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்து போதையில் இருந்த அடியாட்கள் அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் மீது சொத்துக்காக பாண்டியின் சகோதரி மகன்  கூலியாட்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பாண்டி மற்றும் கார்த்தி மீது போதையில் தாக்குதலில் ஈடுபட்ட  முத்துராமலிங்கம், அருண்பாண்டி, பாலமுருகன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் ஒருவரை தேடி வருகின்றனர். 

கஞ்சா விற்பனை தொடர்பாக தந்தை - மகனை அரிவாளால் வெட்டியதாக சொல்லப்பட்ட நிலையில், சொத்து பிரச்சனைக்காக உறவினர்களே ஆட்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day