மயக்கவியல் துறை முதுகலை மாணவி கல்லூரி விடுதியில் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தை சேர்நத் பவபூரணி  என்பவர் மருத்துவம் முடித்த நிலையில் இந்த கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பை, விடுதியில் தங்கி பயின்று வருகிறார். சம்பவத்தன்று அறையில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் கழித்தும் வரவில்லை என தெரிகிறது. சந்தேகம் அடைந்த சக தோழிகள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ள பார்த்தபோது பவபூரணி சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day