மருந்தகங்களில் போலி ORSL, ORSL Plus, ORS Fit என லேபினை பயன்படுத்தி விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை, ORSL, ORSL Plus, ORS Fit என்ற பெயரில் விற்கப்படும் கரைசல்களுக்கு தடை விதித்துள்ளது.

ORS என சுருக்கமாக அழைக்கப்படும் ORAL RE HYDRATION SOLUTION கரைசல்கள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால், நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அதிக அளவில் சோடியம் மற்றும் குளுக்கோஸ் உடைய ORSL, ORSL Plus, ORS Fit என்ற பெயரிலான கரைசல்கள், நாடு முழுவதும் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. 

இந்நிலையில், உலக பொது சுகாதார அமைப்பு மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ORSகள் மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்யப்பட வேண்டும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருந்தகம் மற்றும் கடைகளில் சோதனை செய்து ORSL, ORSL Plus, ORS Fit கரைசல்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ள சுகாதாரத்துறை, சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day