தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... - திமுக அரசின் அலட்சியம் தான் காரணமா...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் டெங்குவால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தாமல் விளம்பர திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் விளம்பர திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில், 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 9 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டில், டெங்கு பரவல் 2 மடங்காக அதிகரித்து 27 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் 8 ஆயிரத்து 558 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களிலேயே 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் இரண்டு மடங்காக அதிகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நான்கரை ஆண்டுகால ஆட்சியில், விளம்பர திமுக அரசின் அலட்சியமே டெங்கு பரவல் அதிகரிப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Night
Day