"Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

நடிகர் ரவி மோகனின் "ப்ரோ கோட்" திரைப்படத்தின் பெயர் தங்கள் நிறுவனத்தின் வர்த்தக பெயர் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லி தனியார் மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், Bro Code என பெயர் வைப்பதை தடுக்க கூடாது என உத்தரவிட்டு, நிறுவனத்தின் எதிர்ப்புக்கும் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மதுபான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேஜஸ்கரியா,  Bro Code என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்ததோடு, ரவி மோகன் ஸ்டுடியோஸ் 4  வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 23ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

varient
Night
Day